உலக தேங்காய் தினம்
உலக தேங்காய் தினம்
உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.
தேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்!
தேங்காய் எண்ணெய்யா… அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பலரும் நம் பாரம்பரிய தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர். வெளிநாட்டு இறக்குமதியான சன்ஃபிளவர் ஆயில், கார்ன் ஆயில், ரைஸ் பிராண்ட் ஆயில், ஆலிவ் ஆயில்தான் சிறந்தது என்று பயன்படுத்தி வருகிறோம். இறக்குமதியின் ஆதிக்கத்தால், உடலுக்கு ஆரோக்கியம்தரும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதையே குறைத்துவிட்டோம். “உண்மையில், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கெடுதியா?” என்று மருத்துவர்களிடம் கேட்டால், “இல்லை” என்கின்றனர். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய்.
* தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது.
* தேங்காய் எண்ணெயை முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். முதுமையானவர்களுக்கு இருக்கும் தோல் சுருக்கம் (Wrinkles) தற்போது, பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைவிட, தேங்காய் எண்ணெயை முகத்தில் தேய்த்துவந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும்.
* தேங்காய் எண்ணெயை தினமும் சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். ஆனால், டீப் ஃபிரை மற்றும் துரித உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. நம் வழக்கமான சமையலில், சாம்பார், கூட்டு, கீரை, பொரியல் என ஏதோ ஒரு வகையில் தினமும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
* அதீத வெப்பம் காரணமாக, சருமத்தில் கறுப்புத் திட்டுகள் அதிகமாக உருவாகும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இது தடுக்கப்படும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத சன் ஸ்க்ரீன், தேங்காய் எண்ணெய்.
* தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.
* தோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும்.
* சருமத்தின் தரம், பொலிவு என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. தேங்காய் எண்ணெயை வெளியே தேய்ப்பதால் மட்டும் அல்ல, உணவு மூலமாக உள்ளுக்கு எடுத்துக்கொள்வதாலும் சருமம் பொலிவுபெறும். இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும்.
* தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, வெந்நீர், மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். பகல் தூக்கம் கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிடுவது, குளிர்ந்த நீர், குளிர்பானம் அருந்துவது தவிர்க்க வேண்டும்.
தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?
தேங்காய் எண்ணெய் தடவினால், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளரவைக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. ஆனால், தலைமுடியின் ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தி பாதுகாக்கத் துணைபுரிகிறது.
தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் காரணமாக, தலைமுடியிடையில் பாக்டீரியா வளர்வது தடுக்கப்படுகிறது.
தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பதால், தலையின் மேற்பகுதித் தோல் மற்றும் முடி இரண்டும் உலர்ந்துபோவது தடுக்கப்படும்.
தேங்காய் எண்ணெயை கை, காலில் தேய்த்துவிட்டு பெயருக்குத் தலையின் மேற்பரப்பில்படும்படி தேய்ப்பது தவறான முறை. தலையின் மேற்பகுதித் தோலில் (Scalp) படியும்படி நன்றாகத் தேய்க்க வேண்டும்.
உலர் சருமம் மற்றும் வலுக் குறைந்த தலைமுடி கொண்டவர்கள், தலைமுடி உதிரும் பிரச்னை இருப்பவர்கள் இரவு படுக்கும்போதே தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுப் படுக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்குக் குளிக்க வேண்டும்.
ஆரோக்கியமான தலைமுடி கொண்டவர்கள், தலைமுடியைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தினமும் காலை குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு தலைக்குக் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, ஷாம்புக்களைப் பயன்படுத்துவது தவறு. ஷாம்புவில் இருக்கும் வேதிப்பொருட்கள் தேங்காய் எண்ணெயின் பணிகளைத் தடுக்கும். எனவே, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஆயில் புல்லிங்…
தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்துவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள், தாடைகளில் இருக்கும் கிருமிகள் அழியும்.
தேங்காய் எண்ணெய் தூய்மையான செக்கு எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
நலம் தரும்
“தஞ்சை உழவன்”
செக்கு நல்லெண்ணெய்
கடலெண்ணெய்
செக்கு தேங்காயெண்ணெய்
வகைகளுடன் ஆரோகியமாக இணைந்திருங்கள்.
*உங்களுடைய தேவைகளுக்கு “தஞ்சை உழவன்” வாங்கி பயணடைவீர்
Related Posts
உலக தேங்காய் தினம்
உலக தேங்காய் தினம் உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம்...
Read MoreTeacher’s Day
Teacher's Day Teacher’s day has been celebrated annually since September 5,...
Read MoreWorld Coconut Day
History of World Coconut Day The first-ever celebration of World Coconut Day was...
Read More