சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொண்ட அவர் தான்விற்பனை செய்யும் பொருட்களின் தரம், தரத்திற்கேற்ற விலை, மற்றும் அவர்களின் தேவைக்கு தட்டுப்பாடின்றி கிடைக்குமா, போன்ற அனைத்து விஷயங்களையும் கணக்கிட்டு நுகர்வோர் நலன் கருதி அவர் பலதருணங்களில் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கே சென்று, ஆய்வு செய்து, நுகர்வோர் தேவைக்கும், பயன்பாட்டுக்கும், மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அப்பொருள் கிடைத்திட ஆராய்ந்து அதில் அனுபவமும் பெற்று வெற்றியும் பெற்றார்.
அபரிமிதமான இந்த வெற்றியைப்பெற்ற திரு. காந்திமுதலியார் அவர்கள் இந்த வெற்றி தனக்குப் பின்னும் தொடர்ந்திட தன்னுடைய மகன் திரு. மோகன் அவர்களை அவர்தம் குழந்தைப் பருவத்தில் இருந்தே இதில் ஈடுபடுத்த விரும்பினார்.
அவருக்கு தன்னுடைய தொழிலைப் பயிற்றுவித்து, தன்னுடைய தொழில் நுணுக்கங்களையும், நுகர்வோரின் தேவைகளையும் கற்றுக்கொடுத்தார். நுகர்வோரின் மனதிருப்தியே தன் தொழிலின் வெற்றிக்குக் காரணம் என்பதையும் உணரச் செய்தார்.
திரு. காந்திமுதலியார் அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் அவருடைய மகன் திரு. மோகன் அவர்களை மொத்தம் மற்றும் சில்லரை வணிகத்தில் மேலும் பலமடங்கு வளர்ச்சி அடையச்செய்தது.
இந்த வளர்ச்சியே பின் நாளில் அதாவது 1988 ஆம் ஆண்டில் அவரை வணிகத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வைத்தது என்றால் அது மிகையாகாது
- விற்பனையாளர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
- வாங்குபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
- ஊழியர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இத்தகைய அவருடைய கொள்கைரீதியான வியாபாரம் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தச் செயல்பாடே நம் தமிழ்நாடு முழுவதும் சந்தையை விரிவுபடுத்த அவரை ஊக்கப்படுத்தியது. இதுவரை பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை சரியான முறையில் சந்தைப்படுத்தி வெற்றி பெற்ற இவர் தானே தனது பொருட்களை சந்தைப்படுத்த எண்ணினார்.
தன்னுடைய சேவையை விரிவு செய்யும் நோக்கத்திலும், வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அனைவரின் எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தரமான, சுத்தமான செக்கு நல்லெண்ணெய், செக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெயை, “தஞ்சை உழவன்” என்கிற பெயரில் நியாயமான விலையில் அனைவருக்கும் வழங்கிட மகிழ்வோடும் பெருமையொடும் அறிமுகப்படுத்தி அதை இணையவழி மூலமாகவும் சந்தை படுத்தியுள்ளார்