‘உணவே மருந்து மருந்தே உணவு’
சங்க கால தமிழர் உணவு முறையில் சிறந்து விளங்கிய சிறு தானியங்கள்
“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” – புறநானூறு
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த இயற்கை விளைபொருட்களின் அடிப்படையில் அந்தந்தப் பகுதி மக்களின் உணவுப் பழக்கம் அமைந்திருந்தது.
உயிர் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவையில் இருந்த உணவு சுவை இன்பத்திற்கானதாக அதன் பின்னரே மாறியிருக்கக்கூடும் என்பது பல ஆய்வாளர்களின் கூற்றாகும்.
நிலத்திற்கு ஏற்ப உணவு
தங்கள் மண்ணில் விளைந்த பொருட்களைப் பதப்படுத்தி வைத்துக் கொள்ளவும், அதனை சமைக்கவும் பழகிக் கொண்ட பின்னர் அந்தந்தப் பகுதி மக்களின் அடையாளமாகவும் உணவுகள் மாறிவிடுகிறது.
உணவு என்பது ஒரு இனக்குழுவின் செழிப்பின், வசதியின் அடையாளமாகவும் மாறி விட்டிருக்கிறது. அதனால் தான் நதிக்கரைகளில், அதாவது விவசாயம் செய்யத் தகுந்த இடங்களில் நாகரிகம் தோன்றி வளர்ந்துள்ளது.
நிலவியல் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியும் பல்வேறுபட்ட, ஆயிரக்கணக்கான வகையிலான தானியங்களை விளைவிக்கின்றன. அதன் அடிப்படையில் உணவின் வகைகளும் விரிகின்றன.
‘உணவே மருந்து மருந்தே உணவு’
உணவின் வகைகள் பல்வகைப்பட்டதாக இருந்தாலும் நமக்கென ஒரு உணவு முறை வழக்கத்தில் உள்ளது.
அறுசுவையோடு மருத்துவ குணம் நிறைந்த பொருட்களையே அடிப்படையாகக் கொண்டு ஒரு சமையல் முறை இங்கே இருந்துள்ளது.
இந்த உணவு முறை நமக்கான அடையாளமாக நிலைத்து நிற்கிறது.
உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உபயோகப்படுத்தக்கூடிய உணவுகள் என்ன? என்பதை பட்டியலிட்டுப் பார்த்தோமானால் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாக இருக்கிறது.
‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு ‘உணவே நஞ்சு நஞ்சே உணவு’ என்ற கோட்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
நாம் மறந்த ஒரு சில பாரம்பரிய சிறு தானியவகை உணவுகளின் சிறப்புக்கள் இதோ.
சங்ககால ‘ஏனல்’ – தினை
சிறுதானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “தினை”.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டிருக்கிறது.
நமது முன்னோர்கள் தினை தானியத்தின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர் என்று அறிய முடிகிறது.
அப்படிபட்ட தினை தானியத்தின் பயன்கள் ஏராளம்.
தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும்.
குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த தினை கஞ்சியை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள்.
தினை நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவற்றை நீக்கும் தன்மை கொண்டது. உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமான புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும்.
தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.
அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான தீவிரமான ஞாபக மறதி நோயாகும். இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்று விடுவர்.
தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம்…….. அடுத்த வலைப்பதிவு வரும் வரை பாரம்பரியம் மிக்க
நலம் தரும்
“தஞ்சை உழவன்”
செக்கு நல்லெண்ணெய்
கடலெண்ணெய்
செக்கு தேங்காயெண்ணெய்
வகைகளுடன் ஆரோகியமாக இணைந்திருங்கள்.
*உங்களுடைய தேவைகளுக்கு https://www.nalamtharum.in/inventory-oil/ வாங்கி பயணடைவீர்